/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நந்திவரத்தில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றக்கோரி கலெக்டருக்கு மனு
/
நந்திவரத்தில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றக்கோரி கலெக்டருக்கு மனு
நந்திவரத்தில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றக்கோரி கலெக்டருக்கு மனு
நந்திவரத்தில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றக்கோரி கலெக்டருக்கு மனு
ADDED : அக் 02, 2024 01:49 AM

கூடுவாஞ்சேரி:நந்திவரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த சரவணகுமார் என்பவர், கலெக்டருக்கு மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி, 21வது வார்டுக்கு உட்பட்ட பாரி தெரு, என்.எஸ்.கே., தெருவில், கழிவுநீர் மற்றும் மழைநீர் வடிகால்வாயை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
இப்பகுதியில் இந்த இரண்டு தெருக்கள் வழியாக, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, காமராஜபுரத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் படித்து வரும், 5,000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் சென்று வருகின்றனர்.
பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் மாணவியர், இந்த தெருக்கள் வழியாக, தங்களது சைக்கிளில் செல்லும் போது, இந்த சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளால் சிரமம் அடைகின்றனர்.
மேலும், இந்த இரண்டு தெருக்களிலும் வசித்து வருவோர் குடியிருந்து வரும் வீடுகளை, வணிக ரீதியாகவும் பயன்படுத்தி வருவதோடு, நகராட்சியில் அனுமதி பெறாமல், மழைநீர் வடிகால்வாய் மீது பெட்டிக்கடை போன்று வடிவமைத்து வாடகைக்கு விட்டுள்ளனர்.
அதில், பத்திர எழுத்தக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கூடுவாஞ்சேரி சார் - பதிவாளர் அலுவலகம் அருகில் இருப்பதால், இந்த சாலையை ஆக்கிரமித்து, உரிய அனுமதி பெறாமல் வணிக நோக்கத்தில் செயல்படும் ஆக்கிரமிப்புகளை அகற்ற, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

