/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆப்பூர் ஊராட்சி முகாமில் குவிந்த கோரிக்கை மனுக்கள்
/
ஆப்பூர் ஊராட்சி முகாமில் குவிந்த கோரிக்கை மனுக்கள்
ஆப்பூர் ஊராட்சி முகாமில் குவிந்த கோரிக்கை மனுக்கள்
ஆப்பூர் ஊராட்சி முகாமில் குவிந்த கோரிக்கை மனுக்கள்
ADDED : செப் 03, 2025 01:01 AM

மறைமலை நகர்:மறைமலை நகர் அருகே ஆப்பூர் ஊராட்சியில் நடந்த, 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் நேற்று ஏராளமானோர் மனு கொடுத்தனர்.
காட்டாங்குளத்துார் ஒன்றியம், ஆப்பூர் ஊராட்சி அலுவலகத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நேற்று நடந்தது. செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி துவக்கி வைத்தார்.
இதில், ஆப்பூர் மற்றும் கொளத்துார் ஊராட்சிகளுக்கு உட்பட்ட சேந்தமங்கலம், வெண்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பட்டா, மின் இணைப்பு, மகளிர் உரிமைத்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்டவை கோரி, எம்.எம்.ஏ.,விடம் 770க்கும் மேற்பட்ட மனுக்கள் அளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில், ஆப்பூர் ஊராட்சி தலைவர் குமாரசாமி, காட்டாங்குளத்துார் தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலர் சந்தானம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மனு கொடுக்க வந்தவர்களுக்கு, 'முதல்வர் மருந்து பெட்டகம்' வழங்கப் பட்டது.
அச்சிறுபாக்கம் அருகே, காட்டுக்கரணை ஊராட்சியில், 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம், ஊராட்சி தலைவர் தர்மராஜ் தலைமையில், நேற்று நடந்தது.
இதில் வீட்டுமனை பட்டா, ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 500க்கும் மேற்பட்ட மனுக்களை, துறை சார்ந்த அதிகாரிகளிடம் மக்கள் வழங்கினர்.