/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி மொபைல் போன் பறிப்பு
/
பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி மொபைல் போன் பறிப்பு
ADDED : நவ 09, 2025 05:16 AM
திருப்போரூர்: பொன்மார் பகுதியில் பெட்ரோல் பங்க் அறையில் துாங்கிக் கொண்டிருந்த ஊழியர்களை தாக்கி பணம், மொபைல் போன் பறித்து தப்பிய மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
திருப்போரூர் ஒன்றியம், மாம்பாக்கம்- மேடவாக்கம் சாலை, பொன்மார் பகுதியில் பெட்ரோல் பங்க் உள்ளது.
இதில், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த அருண்குமார், 21, வசந்த், 25 பணிபுரிகின்றனர்.
இருவரும் நேற்று முன்தினம் நள்ளிரவு 12:00 மணி வரை பணிபுரிந்தனர். 14,000 ரூபாயை அலுவலக டேபிள் லாக்கரில் வைத்தனர். பின், உள்தாழ்ப்பாள் இட்டு துாங்கி விட்டனர்.
நேற்று அதிகாலை 4:40 மணிக்கு, மூன்று மர்ப நபர்கள் கத்தி மற்றும் இரும்பு ராடுகளுடன் இரண்டு பைக்குகளில் பெட்ரோல் பங்கிற்கு வந்தனர்.
அவர்கள் பெட்ரோல் பங்க் கண்ணாடி கதவை உடைத்து உள்ளே புகுந்து அருண்குமார் மற்றும் வசந்த் ஆகிய இருவரையும் கத்தியை காண்பித்து மிரட்டினர். அருண்குமாரை இரும்பு ராடால் வலது கையில் தாக்கி 14,000 ரூபாய், மொபைல் போனை பறித்துக்கொண்டு தப்பினர்.
பெட்ரோல் பங்கின் உரிமையாளர் மணிவண்ணன் நேற்று காலை தாழம்பூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

