/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அச்சிறுபாக்கம் பி.டி.ஓ., ஆபீசில் திரியும் பன்றிகளால் சீர்கேடு
/
அச்சிறுபாக்கம் பி.டி.ஓ., ஆபீசில் திரியும் பன்றிகளால் சீர்கேடு
அச்சிறுபாக்கம் பி.டி.ஓ., ஆபீசில் திரியும் பன்றிகளால் சீர்கேடு
அச்சிறுபாக்கம் பி.டி.ஓ., ஆபீசில் திரியும் பன்றிகளால் சீர்கேடு
ADDED : டிச 30, 2025 06:22 AM

அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகம், சென்னை --- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையின் புறவழிச் சாலையில் அமைந்துள்ளது.
இந்த அலுவலகத்தின் உள்ளே, வட்டார அளவிலான தோட்டக்கலை, வேளாண்மை, நீர் பாசனத்துறை, பள்ளி கல்வித்துறை மற்றும் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம், ஒருங்கிணைந்த மகளிர் திட்ட அலுவலகம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.
வட்டார வளர்ச்சி அலுவலகத்தை சுற்றி, போதிய அளவு சுவர் இல்லாததால், பன்றிகள் அலுவலக வளாகத்தில் உலா வருகின்றன.
இதனால், இருசக்கர வாகனங்களில் செல்வோர், பன்றிகள் திடீரென குறுக்கே செல்வதால் கீழே விழுந்து அடிபடுகின்றனர். அத்துடன், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. எனவே, பன்றிகள் வராதவாறு சுவர் அமைக்க வேண்டும்.
- சசிகுமார்: அச்சிறுபாக்கம்.