/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லை அரசு மாநாட்டு அரங்கம் ரூ.20 கோடியில் மேம்படுத்த திட்டம் சுற்றுலா அமைச்சர் அதிகாரிகளுடன் ஆய்வு
/
மாமல்லை அரசு மாநாட்டு அரங்கம் ரூ.20 கோடியில் மேம்படுத்த திட்டம் சுற்றுலா அமைச்சர் அதிகாரிகளுடன் ஆய்வு
மாமல்லை அரசு மாநாட்டு அரங்கம் ரூ.20 கோடியில் மேம்படுத்த திட்டம் சுற்றுலா அமைச்சர் அதிகாரிகளுடன் ஆய்வு
மாமல்லை அரசு மாநாட்டு அரங்கம் ரூ.20 கோடியில் மேம்படுத்த திட்டம் சுற்றுலா அமைச்சர் அதிகாரிகளுடன் ஆய்வு
ADDED : நவ 22, 2024 12:32 AM

மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில் இயங்கிவரும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக விடுதிக்கு, துறை இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதீஷ், திருப்போரூர் வி.சி., - எம்.எல்.ஏ., பாலாஜி, மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், சுற்றுலா வளர்ச்சிக் கழக மண்டல மேலாளர் வெங்கடேசன், சுற்றுலா அலுவலர் சக்திவேல் உள்ளிட்டோருடன் ஆய்வு செய்தார்.
விடுதி அறைகள், சமையற்கூடம், கருத்தரங்க கூடம், நீச்சல் குளம் ஆகியவற்றை பார்வையிட்டார். மேற்கூரை சேதத்தால், மழைநீர் ஒழுகியுள்ளதை கண்டு, பராமரிக்க அறிவுறுத்தினார்.
இயக்குனர் நீச்சல் குளத்தை, விடுதி பயணியர் மட்டுமின்றி, பிற பொது மக்களையும் குறிப்பிட்ட நேரத்தில், கட்டணத்திற்கு அனுமதிப்பது குறித்து ஆலோசித்தார்.
பயனின்றி சீரழிந்த முந்தைய கருத்தரங்க கூடத்தின் அவலத்தைக் கண்டு, அதை புனரமைத்து பயன்படுத்த இயலுமா என்றும் கேட்டறிந்தார்.
விடுதியில், 20 கோடி ரூபாய் மதிப்பில் அமையவுள்ள மாநாட்டு அரங்கம் குறித்து கேட்டறிந்து, சில திருத்தங்களுடன் வரைபடம் தயாரிக்க கூறினார்.
விடுதி வளாகத்தில் உள்ள செம்மொழி பூங்காவையும் பார்வையிட்டனர். இப்பூங்காவை பயணியர் காண இயலாத சூழல் குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளதை அறிந்த அமைச்சர், பூங்காவை எவ்வாறு மேம்படுத்தலாம் என கேட்டார்.
தொடர்ந்து, அதிகாரிகளிடம், பூங்கா புல்வெளியில் புதர் சூழாமல் தவிர்த்து, இரவிலும் காணும் வகையில் பிரகாச விளக்குகள், மாமல்லபுரம் மற்றும் பிற சுற்றுலா பகுதிகளில், இப்பூங்கா குறித்த விளம்பர பதாகை அமைத்து மேம்படுத்த அறிவுறுத்தினார்.
கடற்கரை கோவில் அருகில், சுற்றுலா வளர்ச்சிக் கழக இடத்தில் செயல்படுத்தவுள்ள மேம்பாட்டு திட்டம், மரகத பூங்கா வளாகத்தில் தனியார் பங்களிப்பில் செயல்படுத்தும் ஒளிரும் தோட்டம், அர்ஜுனன் தபசு சிற்ப பகுதியில் செயல்படுத்தவுள்ள 3டி லேசர் ஒளி - ஒலி காட்சி திட்டம் ஆகியவை குறித்தும் பார்வையிட்டார்.
ஒளி - ஒலி காட்சி, சிற்ப பகுதியின் முன்புறம் பிரதான சாலையில் நடத்துவது, பொது இடத்தில் அதற்காக நுழைவுக்கட்டணம் வசூலிப்பது ஆகியவற்றில் உள்ள குளறுபடிகள், தொல்லியல் துறை அனுமதி ஆகியவை குறித்து, அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பிய இயக்குனர், தன்னிடம் திட்ட செயல்பாட்டு நடைமுறையை ஆலோசிக்க வேண்டும் என, அறிவுறுத்தினார்.