/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தாலி மங்கலம் ஏரிக்கரையில் பனை விதைகள் நடவு
/
தாலி மங்கலம் ஏரிக்கரையில் பனை விதைகள் நடவு
ADDED : செப் 08, 2025 12:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலைநகர்:மறைமலை நகர் அருகில் சமூக ஆர்வலர்கள் இணைந்து ஏரிக்கரையில் பனை விதைகளை நட்டனர்.
ஆப்பூர் ஊராட்சியில் தாலிமங்கலம் ஏரி உள்ளது. இந்த ஏரி மாவட்ட நிர்வாகம் சார்பில் தூர்வாரப்பட்டு ஏரிக்கரை சுத்தம் செய்யப்பட்டு மண் கொட்டி பலப்படுத்தப்பட்டது.
இதையடுத்து மறைமலை நகர் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் இணைந்து இந்த ஏரிக்கரையில் பனை விதைகள் நட முடிவு செய்தனர்.
இதையடுத்து, நேற்று காலை பல்வேறு இடங்களில் சேகரித்த 350 பனை விதைகளை ஏரிக்கரையில் நட்டனர்.