/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
போக்சோ வழக்கில் பிளஸ் 1 மாணவன் கைது
/
போக்சோ வழக்கில் பிளஸ் 1 மாணவன் கைது
ADDED : ஜன 19, 2025 02:29 AM
மேல்மருவத்துார், சூனாம்பேடு அருகே ஒத்திவிளாகம் கிராமத்தைச் சேர்ந்த மாணவி, கடுக்கலுார் உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.
அதே கிராமத்தைச் சேர்ந்த மாணவர், வெண்ணாங்கு பட்டு ஊராட்சியில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார்.
சில தினங்களுக்கு முன், பள்ளிச் சென்ற மாணவியிடம், ஆசை வார்த்தை கூறி, மாணவியின் கையை பிடித்து, இழுத்துள்ளார். இதுகுறித்து மாணவி, அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். மாணவியின் பெற்றோர், நேற்று முன்தினம், மேல்மருவத்துார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
வழக்குப் பதிவு செய்த போலீசார், மாணவரை கைது செய்து, செங்கல்பட்டில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறார் சிறையில் அடைத்தனர். சிறையில் அடைக்கப்பட்ட மாணவர், ஒரு ஆண்டுக்கு முன், கூட்டு பாலியல் புகாரில், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.