ADDED : மார் 21, 2026 09:05 PM
சிங்கபெருமாள் கோவில்:சிங்கபெருமாள் கோவில் அடுத்த செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் டில்லிபாபு மகன் தனுஷ்,17. மறைமலை நகரில் உள்ள சி. பி.எஸ்.சி., பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார்.
தற்போது பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில் அதே பள்ளியில் நீட் தேர்வுக்கு 'கோச்சிங்' சென்று வந்தார். கடந்த சில நாட்களாக தனுஷ் மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில்,நேற்று காலை 10:30 மணிக்கு வீட்டில் உள்ள குளியலறையில் குளிக்க செல்வதாக கூறி சென்றவர் நீண்ட நேரமாக வெளியே வரவில்லை.
தனுஷின் தாய் மற்றும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்த போது தனுஷ் பாத்ரூமில் உள்ள இரும்பு கம்பியில் துாக்கில் தொடங்கிய நிலையில் கிடந்தார்.
அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, தனுஷை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
சிங்கபெருமாள் கோவில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
