ADDED : ஏப் 05, 2026 10:22 PM

மாமல்லபுரம்: மாமல்லபுரம் உள்ளிட்ட திருப்போரூர் தொகுதியின் முக்கிய பகுதிகளில், பா.ம.க., வாகன எல். இ.டி., திரையில் திரையிட்டு, தேர்தல் பிரசாரம் செய்கிறது. தமிழக சட்டசபை தேர்தல், வரும் 23ம் தேதி நடக்க உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள, ஏழு தொகுதிகளிலும், தி.மு.க., அ.தி.மு.க., அவற்றின் கூட்டணி கட்சியினர், நா.த.க., த.வெ,க., ஆகிய கட்சியினர் வேட்புமனு அளித்து, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்போரூர் தொகுதியில், அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும் பா.ம.க., வேட்பாளர் பாலுவிற்கு ஓட்டு கேட்டு, அக்கட்சித் தலைவர் அன்புமணி திருப்போரூர், திருக்கழுக்குன்றம் ஆகிய தொகுதிகளில் பிரசாரம் செய்தார்.
மாமல்லபுரம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில், மக்கள் கூடும் இடங்களில், சிறிய வேனில் பொருத்தப்பட்டுள்ள எலக்ட்ரானிக் எல்.இ.டி., திரையில் திரையிட்டும் பிரசாரம் செய்யப்படுகிறது. தி.மு.க., ஆட்சியில் ஏற்பட்ட பாதிப்புகள், அவலங்கள், பா.ம.க., செயல்பாடுகள் என திரையிட்டு விளக்கி, பிரசாரம் செய்யப்படுகிறது.
---------------
