/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாணவியரை சீண்டும் 'ரோமியோ'க்கள் ரோந்து வராமல் போலீசார் அலட்சியம்
/
மாணவியரை சீண்டும் 'ரோமியோ'க்கள் ரோந்து வராமல் போலீசார் அலட்சியம்
மாணவியரை சீண்டும் 'ரோமியோ'க்கள் ரோந்து வராமல் போலீசார் அலட்சியம்
மாணவியரை சீண்டும் 'ரோமியோ'க்கள் ரோந்து வராமல் போலீசார் அலட்சியம்
ADDED : ஆக 27, 2025 12:31 AM
செங்கல்பட்டு:செங்கல்பட்டில் பள்ளி, கல்லுாரி மாணவியர் பாதுகாப்பு கருதி, போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
செங்கல்பட்டு நகராட்சி பகுதியில் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி, அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என, 15 பள்ளிகள் இயங்கி வருகின்றன.
இதுமட்டுமின்றி ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக் கல்லுாரி, அரசு மருத்துவக் கல்லுாரி, செவிலியர் கல்லுாரி, அரசு சட்டக் கல்லுாரி மற்றும் தனியார் பெண்கள் கலைக் கல்லுாரிகளும் செயல்பட்டு வருகின்றன.
இந்த பள்ளி, கல்லுாரிகளில், செங்கல்பட்டு மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவியர் படித்து வருகின்றனர்.
கிராமங்களில் இருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளில், காலையில் பள்ளி கல்லுாரிகளுக்கு வரும் இவர்கள் பழைய, புதிய பேருந்து நிலையங்கள், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை அருகில் உள்ள பயணியர் நிழற்குடை, ராட்டிணங்கிணறு பயணியர் நிழற்குடை பகுதியில் இறங்கிச் செல்கின்றனர்.
இதேபோன்று பள்ளி, கல்லுாரி முடிந்து மாலையில் வீட்டிற்குச் செல்லும் போதும், மேற்கண்ட பேருந்து நிழற்குடைகளில் காத்திருந்து, பேருந்துகளில் பயணம் செய்கின்றனர்.
மாணவியர் பேருந்திற்காக காத்திருக்கும் இந்த நேரங்களில், 'ரோமியோ'க்கள் மாணவியரை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த பகுதியில், காதல் விவகாரத்தில் இளைஞர்கள் மோதிக்கொள்ளும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.
இதனால், பெரும் அசம்பாவிதம் நடப்பதற்குள், போலீசார் தொடர்ந்து ரோந்து வந்து, 'ரோமியோ'க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.