/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லையை கண்காணிக்க 'சிசிடிவி' விடுதிகளுக்கு போலீசார் அறிவுறுத்தல்

ADDED : நவ 28, 2025 03:53 AM
மாமல்லபுரம்: மாமல்லபுரம் பகுதியில் உள்ள சாலைகள், பொது இடங்களில், விடுதி நிர்வாகங்கள் கண்காணிப்பு கேமராக்கள் அமை க்க வேண்டுமென, போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
மாமல்லபுரம் முக்கிய சுற்றுலா இடமாக உள்ளதால், பல்வேறு இடங்களில் இருந்து, பயணியர் சுற்றுலா வருகின்றனர்.
மாமல்லபுரத்திற்கு அருகே கல்பாக்கத்தில், அணுசக்தி தொழிற்வளாகமும் அமைந்துள்ளது. பாதுகாப்பு கருதி இங்குள்ள விடுதிகளில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. அத்துடன், மாமல்லபுரத்தை முழுமையாக கண்காணிக்கவும், பயணியர் போர்வையில் வந்து திருட்டு, கொள்ளை, வழிப்பறி, பெண்களிடம் பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோரை கண்டறியவும், முக்கிய சாலை பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க, காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக, மாமல்லபுரம் போலீஸ் டி.எஸ்.பி., அறிவழகன், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர், விடுதி நிர்வாகங்களுடன் ஆலோசித்து, பயணியர் நடமாடும் சாலைகள், பொது இடங்களில், விடுதிகள் தரப்பினரே கண்காணிப்பு கேமராக்கள் அமைக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர்.