/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நெடுஞ்சாலையில் போலீஸ் பாதுகாப்பு செங்கை எஸ்.பி., சாய் பிரணீத் தகவல்
/
நெடுஞ்சாலையில் போலீஸ் பாதுகாப்பு செங்கை எஸ்.பி., சாய் பிரணீத் தகவல்
நெடுஞ்சாலையில் போலீஸ் பாதுகாப்பு செங்கை எஸ்.பி., சாய் பிரணீத் தகவல்
நெடுஞ்சாலையில் போலீஸ் பாதுகாப்பு செங்கை எஸ்.பி., சாய் பிரணீத் தகவல்
ADDED : ஜன 12, 2024 11:19 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், பொங்கல் விழாவையொட்டி, தேசிய நெடுஞ்சாலை மற்றும் முக்கிய பகுதிகளில், 750 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், கட்டுமான பணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில், தென்மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், ஏராளமானவர்கள் பணி புரிந்துவருகின்றனர்.
இவர்கள், பொங்கல் திருவிழாவிற்கு சொந்த ஊருக்கு செல்ல, அரசு மற்றும் தனியார் பேருந்து, கார், இருசக்கர வாகனங்களில், ஆயிரக்கணக்கானவர் செல்வர்.
பொங்கல் திருவிழா முடிந்ததும், தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருவர். இதனால், சென்னை- - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், போக்குவரத்து பாதிப்பு ஏற்படும்.
இதை தவிர்க்க, செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, பரனுார், அச்சிறுப்பாக்கம் அடுத்த, ஆத்துார் ஆகிய சுங்கச்சாவடிகளில், வாகனங்கள் எளிதில் செல்ல, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று துவங்கி, 18 ம் தேதி வரை பாதுகாப்பு பணயில் ஈடுபடுவர்.
பரனுார் -- ஆத்துார்வரை, 450 போலீசார் பாதுகாப்புபணியில் ஈடுபடுகின்றனர். பொங்கல் திருவிழாவிற்காக, வெளியூர் செல்லும் பொதுமக்கள் எளிதில் சென்றுவர, தேசிய நெடுஞ்சாலையில் 750 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மாமண்டூர் பாலாற்று பாலம், செங்கல்பட்டு புறவழிச்சாலை ஆகிய பகுதிகளில், 24 மணி நேரமும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர்.
இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில், செல்பவர்கள், மதுபோதையில், வாகனத்தை இயக்கக்கூடாது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள், தலைகவசம் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுனர்கள் சீட்டு பெல்ட் அணிந்து, ஓட்ட வேண்டும்.
மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும். வாகன ஓட்டுபவர்கள் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து, செல்ல வேண்டும் என, எஸ்.பி. சாய் பிரணீத் தெரிவித்தார்.