/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டம்
/
ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டம்
ADDED : மே 18, 2025 09:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்:காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், திருப்போரூர் சட்டசபை தொகுதிக்கான ஓட்டுச்சாவடி நிலைய முகவர்கள் ஆலோசனைக் கூட்டம், தண்டலத்தில் உள்ள தனியார் மண்டபத்தில், நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் பங்கேற்று, முகவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு, ஆலோசனை வழங்கினார்.
மேலும், சட்டசபை தேர்தலை முன்னிட்டு பெயர் சேர்த்தல், நீக்கல் போன்ற பணிகளை,' பூத்' வாரியாக செய்திடவும், தமிழக அரசின் சாதனைகளை பொதுமக்களிடையே கொண்டு செல்வது குறித்தும் பேசப்பட்டது.