sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 பொங்கல் பண்டிகை ;திருநெல்வேலி, கோவை உட்பட சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

/

 பொங்கல் பண்டிகை ;திருநெல்வேலி, கோவை உட்பட சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

 பொங்கல் பண்டிகை ;திருநெல்வேலி, கோவை உட்பட சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

 பொங்கல் பண்டிகை ;திருநெல்வேலி, கோவை உட்பட சிறப்பு ரயில்கள் அறிவிப்பு


ADDED : ஜன 04, 2026 05:14 AM

Google News

ADDED : ஜன 04, 2026 05:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து திருநெல்வேலி, கோவை உட்பட பல்வேறு இடங்களுக்கு, சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட அறிக்கை:

நாகர்கோவிலில் இருந்து, வரும் 11, 18ம் தேதிகளில், இரவு 11:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 10:15 மணிக்கு தாம்பரம் வரும். தாம்பரத்தில் இருந்து, வரும் 12, 19ம் தேதிகளில், மாலை 3:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை 3:30 மணிக்கு கன்னியாகுமரி செல்லும்

கன்னி யாகுமரியில் இருந்து, வரும் 13, 20ம் தேதிகளில், இரவு 8:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 10:15 மணிக்கு தாம்பரம் வரும். தாம்பரத்தில் இருந்து, வரும் 14, 21ம் தேதிகளில், மதியம் 12:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 3:30 மணிக்கு நாக ர்கோவில் செல்லும்

திருநெல்வேலியில் இருந்து, வரும் 9, 16ம் தேதிகளில், அதிகாலை 3:45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அதே நாளில் மதியம் 1:15 மணிக்கு செங்கல்பட்டு வரும். செங்கல்பட்டில் இருந்து வரும் 9, 16ம் தேதிகளில், மாலை 3:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை 2:00 மணிக்கு திருநெல்வேலி செல்லும்

திருநெல்வேலியில் இருந்து, வரும் 10, 17ம் தேதிகளில், அதிகாலை 3:45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அதே நாளில் மதியம் 1:15 மணிக்கு செங்கல்பட்டு செல்லும். செங்கல்பட்டில் இருந்து, வரும் 10, 17ம் தேதிகளில், மாலை 5:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை 3:00 மணிக்கு திருநெல்வேலி செல்லும்

கோவையில் இருந்து, வரும் 11, 18ம் தேதிகளில், இரவு 11:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 9:50 மணிக்கு சென்னை சென்ட்ரல் வரும். சென்ட்ரலில் இருந்து, வரும் 12, 19ம் தேதிகளில், இரவு 11:25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 9:00 மணிக்கு கோவை செல்லும்

போத்தனுாரில் இருந்து, வரும் 14, 21ம் தேதிகளில், நள்ளிரவு 12:35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அதே நாளில் காலை 10:30 மணிக்கு சென்ட்ரல் வரும். சென்ட்ரலில் இருந்து வரும் 14, 21ம் தேதிகளில், மதியம் 1:50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அதே நாளில் இரவு 11:15 மணிக்கு போத்தனுார் செல்லும்

திருநெல்வேலியில் இருந்து, வரும் 8ம் தேதி இரவு 11:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 10:30 மணிக்கு எழும்பூர் வரும். எழும்பூரில் இருந்து வரும் 9ம் தேதி, பகல் 12:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அதே நாளில் இரவு 11:30 மணிக்கு திருநெல்வேலிக்கு செல்லும்

ஈரோட்டில் இருந்து, வரும் 13ம் தேதி மாலை 4:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 11:30 மணிக்கு செங்கோட்டை செல்லும். செங்கோட்டையில் இருந்து, வரும் 14ம் தேதி இரவு 8:45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் இரவு 7:30 மணிக்கு போத்தனுார் செல்லும்

ரா மேஸ்வரத்தில் இருந்து, வரும் 13, 20ம் தேதிகளில், இரவு 8:15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 10:15 மணிக்கு தாம்பரம் வரும். தாம்பரத்தில் இருந்து, வரும் 14, 21ம் தேதிகளில், மதியம் 2:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை 3:30 மணிக்கு ராமேஸ்வரம் வரும்.






      Dinamalar
      Follow us