/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூடுவாஞ்சேரி சுற்று பகுதியில் 19 இடங்களில் நாளை மின் தடை
/
கூடுவாஞ்சேரி சுற்று பகுதியில் 19 இடங்களில் நாளை மின் தடை
கூடுவாஞ்சேரி சுற்று பகுதியில் 19 இடங்களில் நாளை மின் தடை
கூடுவாஞ்சேரி சுற்று பகுதியில் 19 இடங்களில் நாளை மின் தடை
ADDED : ஜூன் 17, 2025 10:46 PM
கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரம், காயரம்பேடு மற்றும் சுற்றுப் பகுதியில் உள்ள 19 இடங்களில் நாளை காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை, மின் விநியோகம் தடை செய்யப்பட உள்ளது.
பராமரிப்பு பணி
இதுகுறித்து மறைமலை நகர் மின் கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரம், 33/11 கே.வி., துணை மின் நிலையத்தின் கீழ் உள்ள அந்தோனி பிள்ளை நகர் 11 கே.வி., மின்னுாட்டியில், நாளை, அவசரகால பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளன. இதனால், அந்தோணி பிள்ளை நகர், மாடம்பாக்கம், கே.ஜே.நகர், டி.டி.சி., நகர், சிற்பி நகர், கன்னியப்பா நகர் ஆகிய பகுதிகளில் காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
தவிர, கார்த்திக் நகரின் ஒரு பகுதி, ஜி.எஸ்.டி., சாலை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளிலும் நாளை மின் வினியோகம் நிறுத்தப்படும்.
மேலும், கடந்த 9ம் தேதி, காயரம்பேடு 33/11 கே.வி., துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பெருமாட்டுநல்லுார் 11 கே.வி., மின்னுாட்டியில், பராமரிப்பு பணிகள் நடைபெற இருந்த நிலையில், மின்வட பழுதால் பணிகள் நடக்கவில்லை.
அந்த பணிகள், நாளை 19ம் தேதி நடைபெற உள்ளதால், காயரம்பேடு, சிலம்பொலி நகர், பெருமாட்டு நல்லுார், எஸ்.ஐ.எஸ்., விஷ்ணு பிரியா நகர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மின் விநியோகம்
தவிர, தங்கப்பாபுரம், மூலக் கழனி, சுவாதி நகர், வரதராஜ நகர், காந்தி நகர், செல்வி நகர் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளிலும், நாளை காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.