/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூடுவாஞ்சேரி, மறைமலை நகர் பகுதியில் இன்று மின் தடை
/
கூடுவாஞ்சேரி, மறைமலை நகர் பகுதியில் இன்று மின் தடை
கூடுவாஞ்சேரி, மறைமலை நகர் பகுதியில் இன்று மின் தடை
கூடுவாஞ்சேரி, மறைமலை நகர் பகுதியில் இன்று மின் தடை
ADDED : மே 23, 2025 09:45 PM
கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி மற்றும் மறைமலை நகர் சுற்றுப் பகுதிகளில் இன்று காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என, மின்வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின் விநியோகக் கழகம், மறைமலை நகர் கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:
மறைமலை நகர் 110 கே.வி., துணை மின் நிலையத்தில், இன்று 24ம் தேதி காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
எனவே, மறைமலை நகர் 110/33 கே.வி., சிட்கோ நகர் 33/11 கே.வி., மற்றும் மறைமலை நகர் 33/11 கே.வி., ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், காலை 10 :00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மறைமலை நகர், என்எச்1, என்எச்2, காட்டூர், ரயில் நகர், காந்தி நகர், விஷ்ணு பிரியா அவென்யூ, காட்டாங்கொளத்துார், கானுார், கொருகந்தாங்கல், வி.ஜி.என்., இந்திரா நகர், நின்னக்கரை, கோனாதி ஆகிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
கூடலுார், கடம்பூர், பேரமனுார், சட்டமங்கலம், திருக்கச்சூர், தெல்லிமேடு, செங்குன்றம், மல்ரோசாபுரம், கீழக்காரணை, மறைமலை நகர் சிட்கோ தொழிற்பேட்டை ஆகிய இடங்களிலும் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
கூடுவாஞ்சேரி, பெருமாட்டு நல்லுார், காரணைப் புதுச்சேரி, ஊரப்பாக்கம், ஆதனுார், நந்திவரம், மகாலட்சுமி நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் காலை 10: 00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.