ADDED : செப் 28, 2025 12:02 AM
மறைமலை நகர்:மறைமலை நகர் மின்கோட்டத்திற்கு உட்பட்ட காவனுார், பில்லேரி ஆகிய பகுதிகளில் நாளை மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என, மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை:
மறைமலை நகர் 33/11 கே.வி., துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட காவனுார் பகுதியில் கடந்த 25ம் தேதி, மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருந்தன.
அன்றைய தினம், முதல்வரின் வீடியோ கான்பரன்ஸ் விழா நடை பெற்றதால், பராமரிப்பு பணிகள் வரும் 29ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டன.
இதையடுத்து நாளை அபிகிருஷ்ணா அவென்யூ, ஐஸ்வர்யா குடியிருப்பு, கலைஞர் நகர், காவனுார், கொருக்கந்தாங்கல், ஏரிக்கரை, மாதா கோவில் தெரு, செந்தமிழ்நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரையில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.
இதே போல் கேளம்பாக்கம் 33/11 கே.வி., துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பில்லேரி பகுதியிலும் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
இதனால் ஓ.எம்.ஆர்., ஒரு பகுதி, வீராணம் சாலை, சாத்தாங்குப்பம், ராஜேஸ்வரி நகர், பெரிய பில்லேரி, செங்கண்மால், இளவந்தாங்கல், தையூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரையில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.