/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நெல்லிக்குப்பம் பகுதியில் நாளை மின் தடை
/
நெல்லிக்குப்பம் பகுதியில் நாளை மின் தடை
ADDED : ஜூன் 22, 2025 08:46 PM
கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி அடுத்த நெல்லிக்குப்பம் சுற்றுப் பகுதியில், 10 இடங்களில் நாளை, மின் தடை அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து, மறைமலை நகர் மின் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
மறைமலை நகர் மின் கோட்டம், கூடுவாஞ்சேரி உப கோட்டம், நெல்லிக்குப்பம் 110/11 கே.வி., துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பாண்டூர், காயரம்பேடு ஆகிய பகுதியில் உள்ள 11 கே.வி., மின்னுாட்டிகளில், அவசர கால பராமரிப்பு பணிகள் நாளை நடக்க உள்ளன.
இதனால் மேல் கல்வாய், அலீனா கம்பெனி, அஸ்தினாபுரம், ஒத்திவாக்கம் போலீஸ் அகாடமி, அம்பேத்கர் நகர், ஐ.ஆர்.பி., கம்பெனி, சகுந்தலா வில்லா, கிரவுன் கம்பெனி, மூப்பனார் சாலை மற்றும் சுற்றுப் பகுதியில், நாளை காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை, மின் வினியோகம் நிறுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.