sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கேளம்பாக்கம் வட்டாரத்தில் மின் தடை பிரச்னை ரூ.2.75 கோடியில் மின் பாதை பணி துவக்கம்

/

கேளம்பாக்கம் வட்டாரத்தில் மின் தடை பிரச்னை ரூ.2.75 கோடியில் மின் பாதை பணி துவக்கம்

கேளம்பாக்கம் வட்டாரத்தில் மின் தடை பிரச்னை ரூ.2.75 கோடியில் மின் பாதை பணி துவக்கம்

கேளம்பாக்கம் வட்டாரத்தில் மின் தடை பிரச்னை ரூ.2.75 கோடியில் மின் பாதை பணி துவக்கம்


ADDED : ஜூலை 22, 2025 12:14 AM

Google News

ADDED : ஜூலை 22, 2025 12:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர், கேளம்பாக்கம் சுற்று வட்டார பகுதிகளின் மின் தடை பிரச்னைக்கு தீர்வு காண, 2.75 கோடி ரூபாய் மதிப்பில் புதிய மின் நிலையம், மின் பாதை அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம், கேளம்பாக்கம் ஊராட்சி, சென்னைக்கு அருகில் உள்ளது.

இங்கு அரசு மேல்நிலைப் பள்ளி, ஊராட்சி அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம் போன்ற அரசு சார்ந்த அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

இங்குள்ள பேருந்து நிலையத்திலிருந்து, பல்வேறு பகுதிகளுக்கு 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையை ஒட்டி இருப்பதால், நாளுக்கு நாள் வளர்ச்சி அதிகரித்து வருகிறது.

பல்வேறு பகுதிகளிலிருந்து இடம் பெயர்ந்து, கேளம்பாக்கத்தில் வந்து மக்கள் குடியேறி வருகின்றனர். இதனால், மக்கள் தொகை அதிகரித்து, தேவைகளும் அதிகரிக்கின்றன.

கேளம்பாக்கத்தில் உள்ள 33 கே.வி., துணை மின் நிலையத்திற்கு, மாம்பாக்கம் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வழங்கப்படுகிறது.

கேளம்பாக்கம் துணை மின் நிலையத்திலிருந்து கேளம்பாக்கம், சாதானக்குப்பம், தையூர், படூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், மாம்பாக்கம் -- கேளம்பாக்கம் இடையே வனப்பகுதி இருப்பதால், புயல் மழை நேரங்களில் மரங்கள் சாய்ந்து, மின் கம்பியின் மீது விழுவதால், மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.

அதேபோல், சாலையில் செல்லும் வாகனங்கள் மின் கம்பங்களின் மீது மோதி விபத்து ஏற்படும் போதும், மின் துண்டிப்பு ஏற்படுகிறது.

அந்நேரத்தில், கேளம்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, மக்கள் அவதிப்படுகின்றனர். மேலும், போதிய மின்சாரம் இல்லாததால், உயர்ந்த மற்றும் குறைந்த மின்னழுத்த பிரச்னையும் ஏற்பட்டு, மின் சாதன பொருட்களும் சேதமடைகின்றன.

இவ்வாறு அடிக்கடி ஏற்படும் மின் தடையால், அப்பகுதி மக்கள் கேளம்பாக்கம் துணை மின் நிலைய அலுவலகத்தை முற்றுகையிட்டு, பல்வேறு போராட்டங்கள் நடத்தியுள்ளனர்.

உள்ளாட்சி பிரதிநிதிகள், அதிகாரிகளிடம் சீரான மின்சாரம் கிடைக்கவில்லை என புகாரும் தெரிவித்தனர். இது தொடர்பாக, திருப்போரூர் எம்.எல்.ஏ., பாலாஜி, சட்டசபையில் கோரிக்கை வைத்து வந்தார்.

இதையடுத்து, கேளம்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் மின் துண்டிப்பு பாதிப்பை குறைக்கும் வகையில், திருப்போரூரிலிருந்து 33 கே.வி., மின்சாரம் வழங்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, 2.75 கோடி ரூபாய் மதிப்பில் மின் நிலையம், மின் வழித்தடம், மின் கம்பி, மின் கம்பங்கள் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதையடுத்து, திருப்போரூர் -- கேளம்பாக்கம் இடையே, மின் கம்பங்கள் அமைக்கும் பணிகள் துவங்கி நடந்து வருகின்றன.

இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

கேளம்பாக்கத்தில் மின் பிரச்னையை சமாளிக்க, திருப்போரூரிலிருந்து மின்சாரம் வழங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, 1.25 கோடி ரூபாயில் மின் நிலையம் மட்டும் அமைக்கப்படுகிறது.

இது தவிர, மின் தடத்திற்கு மின் கம்பி, மின் கம்பம் என மொத்தம் 2.75 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படுகிறது. 220 மின் கம்பங்கள் நடப்படும் நிலையில், தற்போது 80க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் நடப்பட்டுள்ளன. இரண்டு மாதத்தில் அனைத்து பணிகளும் முடிக்கப்படும்.

மேலும், கேளம்பாக்கம் துணை மின் நிலையத்தை 110 கே.வி.,க்கு தரம் உயர்த்துவதற்கான கோப்பும், அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

நிரந்தர தீர்வுக்கு வழி என்ன? கேளம்பாக்கத்திற்கு மாம்பாக்கத்திலிருந்து 33 கே.வி., மின்சாரம் வழங்கப்படுகிறது. மின் வடங்கள் அறுந்து விழுதல், போதிய மின்சாரம் இல்லாதது போன்ற காரணங்களால் மின் துண்டிப்பு பிரச்னை ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க, திருப்போரூரிலிருந்து கேளம்பாக்கத்திற்கு 33 கே.வி., மின்சாரம் வழங்குவதற்கான பணிகள் நடக்கின்றன. இதனால், கேளம்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளின் மின் தடை பிரச்னையில் 50 சதவீதம் தான் தீர்வு காண முடியும். சீரான மின்சாரம் கிடைக்கும் வகையிலும், நிரந்தர தீர்வு ஏற்படும் வகையிலும், 33 கே.வி., டிரான்ஸ்பார்மரை, 110 கே.வி.,யாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us