/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மருத்துவ தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கு பயிற்சி
/
மருத்துவ தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கு பயிற்சி
ADDED : மார் 18, 2025 12:25 AM
செங்கல்பட்டு; ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு, மருத்துவ தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:
தமிழக ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் - தாட்கோ வாயிலாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு, பல்வேறு திறன் சார்ந்த பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது.
அதன் அடிப்படையில், செங்கல்பட்டு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு, மருத்துவ தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இப்பயிற்சிக்கு, பி.எஸ்.சி., - எம்.எஸ்.சி., நர்சிங் பட்டயப்படிப்பு, போஸ்ட் பேசிக் பி.எஸ்.சி., நர்சிங் மற்றும் பொது செவிலியர் மருத்துவப்படிப்பு ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இப்பயிற்சி, இரண்டு மாதம் அளிக்கப்படும். விடுதியில் தங்கி படிப்பதற்கான செலவினத் தொகையை தாட்கோ அளிக்கும். இப்பயிற்சி முடிந்தவுடன், தகுதியான நபர்களுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் வாயிலாக, அயல்நாடுகளில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.
இப்பயிற்சியில் சேருவதற்கு, தாட்கோவின் www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.