/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வாகனம் மோதி கர்ப்பிணி மான் பலி
/
வாகனம் மோதி கர்ப்பிணி மான் பலி
ADDED : நவ 27, 2025 04:15 AM

அச்சிறுபாக்கம்: அச்சிறுபாக்கத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், வயிற்றில் குட்டியுடன் இருந்த மான் பலியானது.
அச்சிறுபாக்கம் அருகே வஜ்ரகிரி மலை அடிவார பகுதியில், சமூக காடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இதில், மான்கள் கூட்டமாக வசிக்கின்றன. நேற்று, காலை 6:30 மணியளவில், காட்டில் இருந்து வெளியேறிய இரண்டரை வயதுள்ள பெண் புள்ளி மான்,சென்னை -- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்றது. அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மான் பலியானது.
இதில், மான் வயிற்றில் இருந்த குட்டியும் உயிரிழந்தது. அச்சிறுபாக்கம் வனச்சரகத்தில் இருந்து வனத்துறையினர் சென்று, மானின் உடலை மீட்டனர்.
கால்நடை டாக்டர் பரிசோதனைக்கு பின் வனப் பகுதியில் புதைத்தனர்.

