/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் வரும் 21ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
/
செங்கையில் வரும் 21ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
ADDED : பிப் 18, 2025 06:35 AM
செங்கல்பட்டு : செங்கல்பட்டில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் 21ம் தேதி நடக்கிறது.
இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ்வெளியிட்ட அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து, சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் 21ம் தேதி, வெள்ளிக்கிழமை காலை 9:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை, கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடக்கிறது.
இந்த முகாமில், 50க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனத்தினர் பங்கேற்று, 5,000 பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இதில், எட்டாம் வகுப்பு முதல் பட்ட படிப்பு, ஐ.டி.ஐ., மற்றும் டிப்ளமோ, செவிலியர்கள், மருந்தாளுனர், ஆய்வக உதவியாளர்கள் போன்ற கல்வித்தகுதி உடையவர்கள்பங்கேற்கலாம்.
மாற்றுத்திறனாளிகளும், வேலைவாய்ப்பு பெறலாம். வயது வரம்பு 18 வயது முதல் 45 வயது வரை.
கல்வி சான்றிதழ்கள் நகல்கள், சுய விபர குறிப்பு மற்றும் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் எடுத்துவர வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 044- 27426020 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

