/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அமித் ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்
/
அமித் ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 19, 2024 11:49 PM

திருப்போரூர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'இப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும் அம்பேத்கர்.. அம்பேத்கர்.. என பேசுவது பேஷன் ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை உச்சரித்தால், புண்ணியமாவது கிடைத்திருக்கும்' என ராஜ்யசபாவில் பேசினார்.
இதை கண்டித்து நேற்று செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் பேருந்து நிலையம் அருகே, வி.சி.க., மற்றும் புரட்சி பாரத கட்சியினர் இணைந்து சாலை மறியல் செய்தனர்.
அமித் ஷா உருவபொம்மையை எரித்து கோஷமிட்டனர்.
இதேபோல், மதுராந்தகம் தொகுதிக்கு உட்பட்ட வி.சி.,யினர், மதுராந்தகம் ரயில் நிலையத்தில் அமித்ஷாவை கண்டித்து, ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று காலை, திருப்பதியில் இருந்து புதுச்சேரி சென்ற விரைவு ரயிலை மறித்து, போராட்டம் நடத்தினர்.
மதுராந்தகம் போலீசார் பேச்சு நடத்தியதும் கலைந்து சென்றனர்.