/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சித்தாமூரில் நுாறு நாள் வேலை கோரி பி.டி.ஓ., அலுவலகத்தில் போராட்டம்
/
சித்தாமூரில் நுாறு நாள் வேலை கோரி பி.டி.ஓ., அலுவலகத்தில் போராட்டம்
சித்தாமூரில் நுாறு நாள் வேலை கோரி பி.டி.ஓ., அலுவலகத்தில் போராட்டம்
சித்தாமூரில் நுாறு நாள் வேலை கோரி பி.டி.ஓ., அலுவலகத்தில் போராட்டம்
ADDED : ஜூலை 23, 2025 01:41 AM

சித்தாமூர்:சித்தாமூர் ஒன்றியத்தில், நுாறு நாள் வேலை செய்ததற்கான சம்பளம் மற்றும் வேலை அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
சித்தாமூர் ஒன்றியத்தில் உள்ள 43 ஊராட்சிகளில், மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் குளம் அமைத்தல், கால்வாய் சீரமைத்தல், மரக்கன்றுகள் நடுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதில், சித்தாமூர் ஊராட்சிக்கு உட்பட்ட சூணாம்பேடு, கொளத்துார், அகரம் உள்ளிட்ட பல ஊராட்சிகளில், இந்தாண்டு குறைந்த நாட்களே வேலை வழங்கப்பட்டு உள்ளதாகவும், அதற்கும் சம்பளம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், 200க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று, சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் குவிந்து, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, நுாறு நாள் வேலை செய்ததற்கான சம்பளத்தை உடனே வழங்க வேண்டும். வேலை அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் என, கோஷங்கள் எழுப்பினர்.
பின், அலுவலகம் எதிரே கஞ்சி காய்ச்சி, போராட்டத்தில் ஈடுபட்டோருக்கு மதிய உணவாக வழங்கினர்.