/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கடைசி நேரத்தில் பட்டா மறுப்பு கலெக்டர் ஆபீஸ் முன் போராட்டம்
/
கடைசி நேரத்தில் பட்டா மறுப்பு கலெக்டர் ஆபீஸ் முன் போராட்டம்
கடைசி நேரத்தில் பட்டா மறுப்பு கலெக்டர் ஆபீஸ் முன் போராட்டம்
கடைசி நேரத்தில் பட்டா மறுப்பு கலெக்டர் ஆபீஸ் முன் போராட்டம்
ADDED : ஆக 09, 2025 01:35 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக, 20,026 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை, முதல்வர் ஸ்டாலின் பல்லாவரத்தில் இன்று வழங்குகிறார்.
இதில், செங்கல்பட்டு நகராட்சி மலைப்பூங்கா 12, 13, 19வது வார்டுகளில் வசித்து வரும், 212 பேருக்கு பட்டா வழங்க, வருவாய் துறை அதிகாரிகளால் ஆவணங்கள் பெறப்பட்டு, 'டோக்கன்'களும் வழங்கப்பட்டன.
இந்நிலையில் நேற்று மாலை 3:00 மணியளவில், மலைப்பூங்கா பகுதியில் வசிப்போருக்கு தற்போது பட்டா வழங்கப்படவில்லை என, வருவாய்த்துறை அதிகாரிகள் அப்பகுதி மக்களிடம் தெரிவித்து உள்ளனர்.
இதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த 40 பெண்கள் உட்பட, 60க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை, கலெக்டரை சந்தித்து மனு அளிக்க வந்தனர்.
இவர்களை, கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் போலீசார் தடுத்து நிறுத்தியதால், கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் அமர்ந்து, பட்டா கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அவர்களிடம், செங்கல்பட்டு தாலுகா போலீசார் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் பேச்சு நடத்தினர். இச்சம்பவம் காரணமாக, அங்கு சலசலப்பு ஏற்பட்டது.