ADDED : ஜன 14, 2026 05:30 AM
அ நிறம் | அளவு
மாமல்லபுரம்:அரசு கல்லுாரிகளில், 323 மாணவ - மாணவியருக்கு, விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.
தமிழக அரசு கல்லுாரி மாணவ - மாணவியரின் திறன், டிஜிட்டல் பயன்பாடு மேம்பாடு கருதி, உலகம் உங்கள் கையில் திட்டத்தை, தமிழக அரசு செயல்படுத்துகிறது. இத்திட்டத்தின்கீழ், அவர்கள் பயன்பாட்டிற்காக, மடிக்கணினிகள் வழங்கப்படுகிறது.
மாமல்லபுரம், அரசு கட்டட, சிற்பக்கலைக் கல்லுாரியில், 48 பேர், மாமல்லபுரம் அடுத்த, நெம்மேலி, அரசு கலை, அறிவியல் கல்லுாரியில், 275 பேர் என, 323 மாணவ - மாணவியருக்கு வழங்கப்பட்டன.
