/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
காட்டாங்கொளத்துார் ஊராட்சிகளுக்கு 'பேட்டரி' வாகனங்கள் வழங்கல்
/
காட்டாங்கொளத்துார் ஊராட்சிகளுக்கு 'பேட்டரி' வாகனங்கள் வழங்கல்
காட்டாங்கொளத்துார் ஊராட்சிகளுக்கு 'பேட்டரி' வாகனங்கள் வழங்கல்
காட்டாங்கொளத்துார் ஊராட்சிகளுக்கு 'பேட்டரி' வாகனங்கள் வழங்கல்
ADDED : டிச 10, 2025 08:25 AM

மறைமலை நகர்: காட்டாங்கொளத்துார் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளுக்கு, 'பேட்டரி'யில் இயங்கும் குப்பை சேகரிப்பு வாகனங்கள் வழங்கப்பட்டன.
காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தில், 39 ஊராட்சிகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் வணிக கட்டடங்களில், ஊராட்சி சார்பில் குப்பை சேகரிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஒன்றியத்தில் உள்ள ஆப்பூர், ஒழலுார், வீராபுரம், மண்ணிவாக்கம், நெடுங்குன்றம் உள்ளிட்ட 17 ஊராட்சிகளுக்கு, 15வது நிதிக் குழு மானியத்தில், 1.12 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பேட்டரியில் இயங்கும் 56 குப்பை சேகரிக்கும் வாகனங்களை வழங்கும் நிகழ்ச்சி, காட்டாங்கொளத்துார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், நேற்று நடைபெற்றது.
காட்டாங்கொளத்துார் ஒன்றிய குழு தலைவர் உதயா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி பங்கேற்று, வாகனங்களை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இதில், அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், துாய்மை பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.