/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பெண்ணை மிரட்டி 10 சவரன் பறித்த வாலிபரை மடக்கிய பொதுமக்கள்
/
பெண்ணை மிரட்டி 10 சவரன் பறித்த வாலிபரை மடக்கிய பொதுமக்கள்
பெண்ணை மிரட்டி 10 சவரன் பறித்த வாலிபரை மடக்கிய பொதுமக்கள்
பெண்ணை மிரட்டி 10 சவரன் பறித்த வாலிபரை மடக்கிய பொதுமக்கள்
ADDED : மார் 25, 2025 09:55 PM
கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி அருகே, கத்தியைக் காட்டி பெண்ணை மிரட்டி, 10 சவரன் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற வாலிபரை, பகுதி மக்கள் பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
ஊரப்பாக்கம் மேற்கு, எம்.ஜி.ஆர்., நகர், விவேகானந்தர் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன், 42. அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
இவரது மனைவி பன்னீர்செல்வி, 35, வீட்டின் தரை தளத்தில், பிளாஸ்டிக் பொருள் கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம், மாலை 2:10 மணியளவில் பன்னீர்செல்வி கடையை மூடிவிட்டு, மேல்தளத்தில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, திடீரென வீட்டிற்குள் நுழைந்த வாலிபர், பன்னீர்செல்வியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, அவரின் கழுத்தில் இருந்த 10 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிக்க முயன்றார்.
அப்போது, பன்னீர்செல்வி கூச்சலிட, அங்கிருந்தோர் ஓடி வந்ததால், அந்த வாலிபர் அருகே இருந்த புதருக்குள் மறைந்தார்.
உடனே, காவல் உதவி எண்ணுக்கு மொபைல் போனில் தகவலைக் கூற, கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடம் வந்து, புதருக்குள் பதுங்கியிருந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில், அந்த வாலிபர், துாத்துக்குடி அடுத்த முத்தையாபுரம், கிருஷ்ணா நகரை சேர்ந்த பேரின்பநாதன், 20, என்பதும், ஏற்கனவே செயின் பறிப்பு உள்ளிட்ட சில வழக்குகளில் சிறை சென்று திரும்பியதும் தெரிந்தது.
புகாரின்படி வழக்கு பதிவு செய்த போலீசார், பேரின்பநாதனை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.