sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பிரசாத விற்பனை உள்ளிட்ட உரிமங்கள் கந்தசுவாமி கோவிலில் 28ல் பொது ஏலம்

/

பிரசாத விற்பனை உள்ளிட்ட உரிமங்கள் கந்தசுவாமி கோவிலில் 28ல் பொது ஏலம்

பிரசாத விற்பனை உள்ளிட்ட உரிமங்கள் கந்தசுவாமி கோவிலில் 28ல் பொது ஏலம்

பிரசாத விற்பனை உள்ளிட்ட உரிமங்கள் கந்தசுவாமி கோவிலில் 28ல் பொது ஏலம்


ADDED : மே 24, 2025 08:43 PM

Google News

ADDED : மே 24, 2025 08:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்:திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பிரசாத விற்பனை, காணிக்கை முடி சேகரிப்பு உள்ளிட்ட உரிமங்கள் வழங்க, வரும் 28ம் தேதி பொது ஏலம் நடத்துவதாக, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருப்போரூரில், பிரசித்தி பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது.

இக்கோவிலில், வரும் ஜூலை 1ம் தேதி முதல், 2026 ஜூன் 30ம் தேதி வரை, பல்வேறு உரிமங்கள் வழங்க, வரும் 28ம் தேதி பிற்பகல் 2:00 மணிக்கு, பொது ஏலம் நடத்துவதாக, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதில் பிரசாதங்கள் விற்பனை, காணிக்கை முடிகள் சேகரிப்பு ஆகிய உரிமங்களுக்கு, தலா 20 லட்சம் ரூபாய், நெய் தீபம் விற்பனை உரிமத்திற்கு, 10 லட்சம் ரூபாய் என, முன்வைப்புத் தொகை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல், கோவில் அருகே காலியிடங்கள் மற்றும் புல எண் 271/4ல் நிறுத்தப்படும் வாகனங்கள் பாதுகாப்பு கட்டண வசூல் உரிமத்திற்கு, 2 லட்சம் ரூபாய் என, முன்வைப்புத் தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், 16 கால் மண்டபம், சிமென்ட் ஷீட் கூரை மண்டபம், தென்புற நான்கு கால் மண்டபம் தவிர்த்து, கோவிலுக்கு வெளியே, மாதந்தோறும் பரணி, கிருத்திகை நட்சத்திர நாட்கள், பிரம்மோற்சவம் உள்ளிட்ட விழா காலங்களில் அமைக்கப்படும் தற்காலிக கடைகளுக்கு வாடகை வசூல் உரிமத்திற்கும், 50,000 ரூபாய் முன்வைப்பு தொகை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

கோவில் வளாகத்தில் வெள்ளி உரு விற்பனை உரிமத்திற்கு, 50,000 ரூபாய் முன்வைப்புத் தொகை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

சிதறு தேங்காய், உப்பு, மிளகு சேகரிப்பு உரிமம், காணிக்கையாக அளிக்கும் ஆடு, கோழி சேகரிப்பு உரிமத்திற்கு தலா 10,000 ரூபாய் முன்வைப்புத் தொகை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இத்தொகைக்கான வங்கி வரைவோலையை, கோவில் நிர்வாக அலுவலகத்தில் செலுத்தி, அதற்கான ரசீதுடன், டெண்டர் பெட்டியில் விண்ணப்ப படிவத்தை, வரும் 28ம் தேதி காலை 11:00 மணி வரை போட்டு, ஏலத்தில் பங்கேற்கலாம் என தெரிவித்துள்ளது.

அதேபோல் பந்தல், தெப்பல் அமைத்தல், ஒளி, ஒலி அமைத்தல், புஷ்பம் சப்ளை செய்தல், பால் மற்றும் தயிர் சப்ளை செய்தலுக்கான டெண்டரும், வரும் 28ம் தேதி பகல் 12:00 மணிக்கு நடைபெறுகிறது.

இதில், ஒவ்வொரு வேலைக்கான டெண்டர் கோருபவர்கள், 20,000 ரூபாய் முன்வைப்பு தொகை ரசசீதுடன், விண்ணப்பத்தை வரும் 28ம் தேதி 10:30 மணி வரை, டெண்டர் பெட்டியில் போட்டு பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதில், குறைவான தொகைக்கு டெண்டர் கேட்பவர்களின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும், கோவில் நலன் கருதி யாருடைய டெண்டரையும் ஏற்கவோ, நிராகரிக்கவோ நிர்வாகத்திற்கு உரிமையுண்டு உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் தெரிவிக்கப்பட்டு உள்ளன.






      Dinamalar
      Follow us