/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
காயாரில் புதிதாக மின்மாற்றி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
/
காயாரில் புதிதாக மின்மாற்றி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
காயாரில் புதிதாக மின்மாற்றி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
காயாரில் புதிதாக மின்மாற்றி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
ADDED : ஜூலை 16, 2025 09:33 PM
திருப்போரூர்:காயார் ஊராட்சியில், புதிய மின்மாற்றி அமைக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய காயார் ஊராட்சிக்கு, மாம்பாக்கம் துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் செய்யப்படுகிறது.
இங்குள்ள ஒரே மின்மாற்றி இணைப்பிலிருந்து, 300க்கும் மேற்பட்ட வீடுகள், 30க்கும் மேற்பட்ட விவசாய கிணறுகளின் மின்மோட்டார்கள், வணிக கடைகள், தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது. நாளுக்கு நாள் வளர்ச்சி காரணமாக, இங்குள்ள ஒரே மின்மாற்றியிலிருந்து மேற்கண்ட பகுதிகளுக்கு, போதிய மின்சார வசதி கிடைப்பதில்லை.
இதனால், கடந்த ஐந்து ஆண்டுகளாக, இப்பகுதியில் குறைந்த, உயர் மின்னழுத்த பிரச்னை இருந்து வருகிறது.
இதனால், அப்பகுதியில் அடிக்கடி மின் துண்டிப்பு ஏற்படுவதுடன், வீட்டு உபயோக மின்சாதன பொருட்கள், விவசாய மின்மோட்டார்கள் என, அனைத்தும் பழுதடைகின்றன.
மின்தடையால், இரவு நேரத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, கொசுத் தொல்லையால் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக, இப்பகுதி பொதுமக்கள் சில மாதங்களுக்கு முன், மாம்பாக்கம் துணை மின் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். பின், சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
ஆனாலும், காயாரில் புதிய மின்மாற்றி அமைக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், இப்பகுதி பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
எனவே, காயார் பகுதியில் சீரான மின்சாரம் வழங்க, புதிய மின்மாற்றி அமைக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.