/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஓட்டேரி காவல் நிலைய கட்டுமான பணிகள் விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
/
ஓட்டேரி காவல் நிலைய கட்டுமான பணிகள் விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
ஓட்டேரி காவல் நிலைய கட்டுமான பணிகள் விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
ஓட்டேரி காவல் நிலைய கட்டுமான பணிகள் விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
ADDED : ஜூலை 12, 2025 12:58 AM

ஓட்டேரி:வண்டலுார்,- ஓட்டேரி காவல் நிலைய கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாம்பரம் மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட வண்டலுார், ஓட்டேரி காவல் நிலையம், தற்போது மண்ணிவாக்கம் - வாலாஜாபாத் சாலையில் இயங்கி வருகிறது.
இங்கு, சட்டம் - ஒழுங்கு மற்றும் குற்றப் பிரிவுக்கான காவல் நிலையங்கள், அடுத்தடுத்து தனி கட்டடங்களில் இயங்கி வருகின்றன.
இடவசதி இல்லாததால், ஓட்டேரி போக்குவரத்து காவல் பிரிவுக்கான அலுவலகம், பீர்க்கன்காரணையில் இயங்கி வருகிறது.
இதனால், பொதுமக்கள் புகார் அளிக்க அலையும் நிலை உள்ளது. இந்நிலையில், சட்டம் - ஒழுங்கு, குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து ஆகிய, மூன்று பிரிவு காவல் நிலையங்களும் ஒரே இடத்தில் இயங்கும் வகையில், புதிய கட்டடம் கட்ட, 2023ல் முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, மண்ணிவாக்கம் -- வாலாஜாபாத் சாலை மற்றும் வெளிவட்ட சாலை இணையும் இடத்தில், இரண்டு தளங்களுடன், 4,000 சதுர அடி பரப்பில், புதிய காவல் நிலைய கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டது.
இதற்கான கட்டுமான பணிகள், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகம் சார்பில், 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 2024ல் துவக்கப்பட்டன.
விசாலமான,'பார்க்கிங்' வசதியுடன், மாற்றுத்திறனாளிகள் எளிதாக வந்து செல்லும்படி, சாய்வு தளங்களுடன் இந்த கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
கட்டுமான பணிகள் 90 சதவீதம் முடிந்துள்ள நிலையில், மீதி பணிகளை விரைந்து முடித்து, புதிய காவல் நிலைய கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென பொதுமக்கள் மற்றும் போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.