UPDATED : அக் 13, 2026 07:39 PM
ADDED : அக் 13, 2026 07:36 PM
அ நிறம் | அளவு
செங்கல்பட்டு: ‘நத்தம் கரியச்சேரி கிராமத்தில், வரும் 21ம் தேதி மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெறும்’ என, செங்கல்பட்டு கலெக்டர் வீரப்பன் தெரிவித்துள்ளார்.
கலெக்டர் வீரப்பன் வெளியிட்ட அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்டத்தில், மாதந்தோறும் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, திருக்கழுக்குன்றம் அடுத்த, நத்தம் கரியச்சேரி கிராமத்தில், வரும் 21ம் தேதி மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில், பொதுமக்கள் பங்கேற்று, தங்கள் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அளித்து பயன் பெறலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
