/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
துார் வாரப்படாத செய்யூர் ஏரி பொதுப்பணி துறை அலட்சியம்
/
துார் வாரப்படாத செய்யூர் ஏரி பொதுப்பணி துறை அலட்சியம்
துார் வாரப்படாத செய்யூர் ஏரி பொதுப்பணி துறை அலட்சியம்
துார் வாரப்படாத செய்யூர் ஏரி பொதுப்பணி துறை அலட்சியம்
ADDED : ஜூன் 04, 2025 12:58 AM

செய்யூர்:செய்யூர் ஏரியை துார் வாரி சீரமைக்க வேண்டுமென, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
செய்யூர் கிராமத்தில், 230 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி உள்ளது.
பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியின் வாயிலாக, 500க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள், நீர்ப்பாசனம் பெறுகின்றன.
இப்பகுதியில், அதிக அளவில் நெல் விவசாயம் செய்யப்படுகிறது.
விராலுார், புத்துார் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர், கால்வாய் வழியாக செய்யூர் ஏரிக்கு வந்தடைகிறது.
செய்யூர் ஏரியில் இருந்து மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேறி, கால்வாயில் விவசாய நிலங்களுக்குச் செல்கிறது.
பல ஆண்டுகளாக செய்யூர் ஏரி துார் வாரி சீரமைக்கப்படாமல் உள்ளதால், மழைக்காலத்தில் ஏரியில் போதிய நீரை தேக்க முடியாமல், அதிக அளவிலான தண்ணீர் கலங்கல் வழியாக உபரிநீராக வெளியேறுகிறது.
மேலும் ஏரி உபரிநீர் கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதால், மழைக்காலத்தில் தண்ணீர் செல்ல வழியின்றி, வயல்வெளியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பயிர்கள் சேதமடைகின்றன.
இதனால், பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, செய்யூர் ஏரியை துார் வாரி சீரமைத்து, உபரிநீர் கால்வாய்களை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.