/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வீல்சேர் வாள் சண்டை வீரர்களுக்கு தகுதி போட்டி
/
வீல்சேர் வாள் சண்டை வீரர்களுக்கு தகுதி போட்டி
ADDED : மார் 02, 2024 12:13 AM
சென்னை,:தமிழ்நாடு வீல்சேர் வாள் சண்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு சங்கம் சார்பில், மாநில வீல்சேர் வாள் சண்டை சாம்பியன்ஷிப் போட்டி, மார்ச் 10ம் தேதி நடக்கிறது.
சென்னை பெரியமேடு, ஜவஹர்லால் நேரு விளையாட்டு மைதானம், வாள் சண்டை அரங்கில் நடக்கும் இப்போட்டியில் வெற்றி பெறும் வீரர்கள், தேசிய அளவில் நடக்கும் வீல்சேர் வாள் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழ்நாடு அணி சார்பில் பங்கேற்பர்.
போட்டி அமைப்பாளர்கள் கூறியதாவது:
தேசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கான தமிழக அணியை தேர்வு செய்யும் இப்போட்டியில் பங்கேற்க விரும்பும் வீரர் - வீராங்கனையர் மார்ச் 5ம் தேதிக்குள், தங்கள் பெயரை பதிவு செய்ய வேண்டும்.
விபரங்களுக்கு 98940 59863 மற்றும் 82486 20445 ஆகிய மொபைல் போன் எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

