/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை மாமல்லையில் களைகட்டும் சுற்றுலா
/
பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை மாமல்லையில் களைகட்டும் சுற்றுலா
பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை மாமல்லையில் களைகட்டும் சுற்றுலா
பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை மாமல்லையில் களைகட்டும் சுற்றுலா
ADDED : செப் 28, 2024 11:48 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில், பல்லவர் கால கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு, பிற குடைவரைகள் உள்ளன.
சர்வதேச பாரம்பரிய சின்னங்களாக விளங்கும் அவற்றை, உள்நாடு, சர்வதேச பயணியர் கண்டு ரசிக்கின்றனர். அரசு விடுமுறை நாட்களில், சென்னை சுற்றுப்புற பகுதியினர் வருகை அதிகரிக்கு.
பள்ளிகளுக்கு காலாண்டுத் தேர்வு முடிந்து, நேற்று முதல் அக்., 6ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விடுமுறையின் துவக்க நாளான நேற்றே, பயணியர் குவிய துவங்கினர். காலை 9:00 மணிக்கு, பயணியர் குடும்பத்துடன் படையெடுத்து, சிற்பங்களை கண்டு மகிழ்ந்தனர்.