தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பராமரிப்பு பணிகளுக்காக ரயில்வே கேட் மூடல்

பராமரிப்பு பணிகளுக்காக ரயில்வே கேட் மூடல்

பராமரிப்பு பணிகளுக்காக ரயில்வே கேட் மூடல்


UPDATED : மே 19, 2026 08:39 PM

ADDED : மே 19, 2026 07:53 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 19, 2026 08:39 PM ADDED : மே 19, 2026 07:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மறைமலை நகர்:தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக காட்டாங்கொளத்துார் ரயில்வே கேட் 7 நாட்கள் மூடப்படுவதாக ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செங்கல்பட்டு -- தாம்பரம் ரயில்வே தடத்தில் காட்டாங்கொளத்துார் , காவனூர் சாலையில் ரயில்வே கேட் உள்ளது. இந்த ரயில்வே கேட் வழியாக காவனுார்‍, கொருக்கந்தாங்கல், உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று வருகின்றனர்.

இந்த சாலை ஒரகடம் -- படப்பை சாலையின் இணைப்பு சாலையாகவும் உள்ளது.

இந்த பகுதியில் ரயில்வே நிர்வாகம் சார்பில் பழைய தண்டவாளங்கள் அகற்றப்பட்டு புதிய தண்டவாளங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

இதற்காக 19ம் தேதி முதல் 25ம் தேதி வரை தினமும் காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை ரயில்வே கேட் மூடப்பட்டு பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளன. வாகன ஓட்டிகள் அருகில் உள்ள பொத்தேரி ரயில்வே கேட்டை பயன்படுத்த ரயில்வே அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us