/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரூ.25 லட்சம் மதிப்பில் மழைநீர் வடிகால்வாய்
/
ரூ.25 லட்சம் மதிப்பில் மழைநீர் வடிகால்வாய்
ADDED : மே 20, 2025 12:34 AM

மதுராந்தகம், மதுராந்தகம் நகராட்சி, 22வது வார்டு பகுதியிலுள்ள, ஏரி சாய்ராம் நகரில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
மதுராந்தகத்திலிருந்து சூணாம்பேடு செல்லும் மாநில நெடுஞ்சாலையில், மாம்பாக்கம் ரயில்வே மேம்பாலம் அருகே, புறவழிச் சாலையில், மழைநீர் கால்வாய் இல்லை.
அதனால், ஆண்டுதோறும் பருவமழையின் போது, பாக்கம் ஏரியிலிருந்து கலங்கல் வழியாக வெளியேறும் உபரி நீர், ஏரி சாய்ராம் நகர் பகுதியில் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கும்.
அதைத் தவிர்க்கும் விதமாக, அப்பகுதியில் இருந்து நீர் விரைவாக வெளியேறும் வகையில், மதுராந்தகம் நகராட்சி வாயிலாக, 2025- - 26ம் நிதியாண்டில், 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 672 அடி நீளம் மழைநீர் கால்வாய் மற்றும் சிறு பாலமும் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
விரைவில் இப்பணி முடியும் என, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.