/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூடுவாஞ்சேரி நகராட்சி பகுதியில் மழைநீர் வடிகால்வாய் சீரமைப்பு
/
கூடுவாஞ்சேரி நகராட்சி பகுதியில் மழைநீர் வடிகால்வாய் சீரமைப்பு
கூடுவாஞ்சேரி நகராட்சி பகுதியில் மழைநீர் வடிகால்வாய் சீரமைப்பு
கூடுவாஞ்சேரி நகராட்சி பகுதியில் மழைநீர் வடிகால்வாய் சீரமைப்பு
ADDED : நவ 15, 2024 01:18 AM

கூடுவாஞ்சேரி:நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், சாலையில் தேங்கிய மழை நீர் சீராக செல்வதற்கு வழிவகை செய்யும் வகையில், துாய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
சமீபத்தில் பெய்த மழைநீர் சீராக செல்லாமல், சாலைகளில் தேங்கி, அப்பகுதிவாசிகளுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக இருந்தது. இது குறித்து அப்பகுதிவாசிகள் அளித்த புகாரை தொடர்ந்து, அதை பொக்லைன் இயந்திரம் வாயிலாக அகற்றும் பணியில் நகராட்சி ஈடுபட்டு வருகிறது.
அருகில் உள்ள மழைநீர் வடிகால்வாய் மற்றும் கழிவுநீர் கால்வாயை இணைத்து, அப்பகுதியில் மழைநீர் தேங்காதவாறு சீராக செல்வதற்கு வழிவகை செய்யப்பட்டது.
நேற்று, சீனிவாசபுரம் ஜி.எஸ்.டி., சாலையில் தேங்கிய மழை நீரையும், கூடுவாஞ்சேரி அருள் நகர் 40 அடி சாலையில் தேங்கியிருந்த மழை நீரையும், நகராட்சி துாய்மை பணியாளர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.