/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மழைநீர் வடிகால்வாய் பணி சிறுதாமூரில் விறுவிறு
/
மழைநீர் வடிகால்வாய் பணி சிறுதாமூரில் விறுவிறு
ADDED : அக் 31, 2025 01:15 AM

அச்சிறுபாக்கம்:  அச்சிறுபாக்கம் அருகே சிறுதாமூரில், மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுதாமூர் ஊராட்சியில் இருந்து, முருங்கை கிராமத்திற்கு செல்லும் சாலையோரம், சிறுதாமூர் சுடுகாடு உள்ளது.
இங்குள்ள திறந்தவெளி இடம் மற்றும் வயல்களில் இருந்து, முன்னக்குளம் ஏரிக்கு மழைநீர் செல்லும் வகையில், சிறிய ஓடை உள்ளது.
ஓடை வழியாக வரும் மழைநீர், முருங்கை கிராமத்திற்குச் செல்லும் சாலையோரம் உள்ள கால்வாய் வழியாக செல்லும்.
ஆண்டுதோறும் பருவமழை காலங்களில் மண்ணரிப்பு ஏற்பட்டு, இந்த கால்வாய் துார்ந்து உள்ளது.
இதனால், மழைநீர் முன்னக்குளம் ஏரிக்கு செல்லாமல், விளை நிலங்களில் பாய்ந்து பயிர்கள் நாசமாகின. இதையடுத்து, கால்வாயை சீரமைக்க வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, ஊராட்சி பொது நிதி 2.50 லட்சம் ரூபாயில், கான்கிரீட் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள், 'பொக்லைன்' இயந்திரம் மூலமாக நடைபெற்று வருகின் றன.

