/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வரதராஜ பெருமாள் கோவிலில் ராமர் - சீதா திருக்கல்யாண விழா
/
வரதராஜ பெருமாள் கோவிலில் ராமர் - சீதா திருக்கல்யாண விழா
வரதராஜ பெருமாள் கோவிலில் ராமர் - சீதா திருக்கல்யாண விழா
வரதராஜ பெருமாள் கோவிலில் ராமர் - சீதா திருக்கல்யாண விழா
ADDED : ஏப் 06, 2025 11:48 PM

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் அடுத்த கடமலைப்புத்துாரில், பெருந்தேவி தாயார் உடனுறை வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது.
இங்கு, ராமநவமி கர்ப்ப உத்சவ பெருவிழா மற்றும் திருக்கல்யாணம் நேற்று, நடந்தது. காலை 5:00 மணிக்கு கோ பூஜையுடன் துவங்கியது. 9:00 மணிக்கு சிறப்பு அபிஷேக தீபாராதணை நடந்தது.
ராமயண சொற்பொழிவு மற்றும் ராமாயண இதிகாச காவிய நாடக நாட்டியம் நடந்தது.மாலை 5:00மணிக்கு வைணவ முறைப்படி திருவேத மந்திரம் முழங்க ராமர் - சீதாலட்சுமி திருக்கல்யாணம் மற்றும் பட்டாபிஷேக உத்சவம் நடந்தது.
இரவு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், ராமர் -- சீதாலட்சுமி திருக்கல்யாண பட்டாபிஷேக சிறப்பு அலங்காரத்தில், பஜனை குழுவினருடன் முக்கிய வீதிகளில் திருவீதி உலா நடந்தது.
விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.