ADDED : மார் 21, 2026 09:08 PM
அ நிறம் | அளவு
திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய பகுதிகளில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, பள்ளி வாசல்களில் நடந்த சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
திருப்போரூர் ஜும்மா பள்ளிவாசலில் நேற்று ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது. ஏழைகளுக்கு உதவி பொருட்கள் வழங்கப்பட்டன. இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து, ஒருவொருக்கொருவர் கைகொடுத்து ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். கோவளத்தில் உள்ள தமீம்அன்சாரி தர்காவில் சிறப்பு வழிபாடு நடந்தது. அதேபோல், கேளம்பாக்கம், கானத்துார், மானாம்பதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளி வாசல்களிலும் ரம்ஜான் விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
