ADDED : அக் 29, 2025 11:03 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் அரிய வகை விஷ பாம்பு பிடிபட்டது.
மாமல்லபுரத்தில், கோவளம் சாலையிலுள்ள தனியார் விடுதி அருகே, திறந்தவெளி பகுதி புதரில் நேற்று மாலை 3:00 மணியளவில், வழக்கத்திற்கு மாறான பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது. இதைப் பார்த்தவர்கள், மாமல்லபுரம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு அலுவலர் இன்பராஜ் தலைமையிலான வீரர்கள், அந்த பாம்பை லாவகமாக பிடித்து, திருக்கழுக்குன்றம் சரக வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
அதை பார்வையிட்ட வனத்துறையினர், தமிழக மேற்கத்திய வனப்பகுதியில் காணப்படும் அரிய வகை விஷ பாம்பு என தெரிவித்தனர்.

