/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிங்கபெருமாள் கோவிலில் ரத சப்தமி உற்சவம்
/
சிங்கபெருமாள் கோவிலில் ரத சப்தமி உற்சவம்
ADDED : பிப் 17, 2024 01:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவிலில் அனுமந்தபுரம் சாலையில், பழமையான பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இக்கோவிலில், நேற்று ரத சப்தமி உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. காலை 6:30 மணிக்கு உற்சவர் பிரகலாத வரதர் சூரிய பிரபை வாகனத்திலும், 8:00 மணிக்கு கருட வாகனத்திலும், அதன்பின், சிம்ம வாகனங்களில் எழுந்தருளி, மங்கல வாத்தியம் முழங்க நான்கு மாட வீதிகளில் வலம் வந்தார்.
இதில், சிங்கபெருமாள் கோவில் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.