ரேஷன் கார்டு திருத்த முகாம் 112 மனுக்கள் மீது தீர்வு
ரேஷன் கார்டு திருத்த முகாம் 112 மனுக்கள் மீது தீர்வு
ADDED : மே 10, 2026 04:28 AM

அ நிறம் | அளவு
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், ரேஷன் கார்டு திருத்த சிறப்பு முகாமில் 112 மனுக்களுக்கு நேற்று, தீர்வு காணப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார் ஆகிய தாலுகாக்கள் உள்ளன.
இந்த தாலுகாக்களில், ஆத்துார், மாம்பாக்கம், வடக்கு செய்யூர், சதுரங்கப்பட்டினம், கேளம்பாக்கம், மேலக்கோட்டையூர் ஆகிய கிராமங்களில், ரேஷன் கார்டு திருத்த சிறப்பு முகாம் நேற்று நடந்தது.
இந்த முகாமில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், மொபைல் எண் மாற்றம், உள்ளிட்ட 112 மனுக்கள் பயனாளர்களிடம் இருந்து பெறப்பட்டன.
இந்த மனுக்கள் மீது, அந்தந்த தாலுகாக்களில் உள்ள வட்ட வழங்கல் அலுவலர்கள் பரிசீலனை செய்து, 112 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
