/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரேஷன் கார்டு திருத்த முகாம் 183 மனுக்களுக்கு தீர்வு
/
ரேஷன் கார்டு திருத்த முகாம் 183 மனுக்களுக்கு தீர்வு
ரேஷன் கார்டு திருத்த முகாம் 183 மனுக்களுக்கு தீர்வு
ரேஷன் கார்டு திருத்த முகாம் 183 மனுக்களுக்கு தீர்வு
ADDED : ஜூன் 14, 2025 07:52 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், ரேஷன்கார்டு திருத்தம் சிறப்பு முகாமில், 183 மனுக்களுக்கு தீர்வுகாணப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார் ஆகிய தாலுகாவில், தைலாவரம், பரசல்லுார், அல்லுார், அழகுசமுத்திரம், ஆமூர், புதுப்பாக்கம் ஆகிய கிராமங்களில் ரேஷன் கார்டு திருத்தம் முகாம், நேற்று, நடந்தது.
முகாமில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், மொபைல் போன் எண் மாற்றம் உள்ளிட்ட 183 மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்கள் மீது, அந்தந்த தாலுகாவில் வட்ட வழங்கல் அலுவலர்கள் பரிசிலினை செய்து, தீர்வுகண்டனர் என, மாவட்ட வழங்கல் அலுவலர் சாகிதா பர்வீன் தெரிவித்தார்.