ADDED : ஏப் 12, 2025 08:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:செங்கல்பட்டில், ரேஷன் கார்டு திருத்தம் சிறப்பு முகாமில், 147 மனுக்களுக்கு தீர்வுகாணப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார் ஆகிய தாலுகாவில், ரேஷன் கார்டு திருத்தம் சிறப்பு முகாம், நேற்று, நடந்தது.
இதில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் புகைப்படம் திருத்தம் மற்றும் மொலைபல் எண் சேர்த்தல் என, 147 மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்கள் பரிசீலினை செய்யப்பட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, மாவட்ட வழங்கல் அலுவலர் சாகிதா பர்வீன் தெரிவித்தார்.