/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
'தாயுமானவர்' திட்டத்தில் 33,745 பேருக்கு ரேஷன் பொருள்
/
'தாயுமானவர்' திட்டத்தில் 33,745 பேருக்கு ரேஷன் பொருள்
'தாயுமானவர்' திட்டத்தில் 33,745 பேருக்கு ரேஷன் பொருள்
'தாயுமானவர்' திட்டத்தில் 33,745 பேருக்கு ரேஷன் பொருள்
ADDED : நவ 30, 2025 12:32 AM
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், முதல்வரின் 'தாயுமானவர்' திட்டத்தில், தகுதியுள்ள 33,745 பேருக்கு, வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்பட உள்ளன.
இதுகுறித்து, கலெக்டர் சினேகா வெளியிட்ட அறிக்கை:
தமிழக முதல்வரின் 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 70 வயதிற்கு மேற்பட்ட வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று, ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார் ஆகிய தாலுகாக்களில், 841 நியாய விலைக்கடைகளில், 33,745 தகுதி வாய்ந்த குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.
இவர்களுக்கு, வரும் டிச., 2ம் தேதி துவங்கி, 4ம் தேதி வரை, அவர்கள் இல்லத்திற்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட உள்ளன.
எனவே, தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்கள் மேற்கண்ட திட்டத்தை பயன்படுத்தி, பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

