/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரேஷன் பணியாளர் பணி நேர்முக தேர்வு துவக்கம்
/
ரேஷன் பணியாளர் பணி நேர்முக தேர்வு துவக்கம்
ADDED : நவ 28, 2024 02:33 AM
செங்கல்பட்டு, செங்கல்பட்டில், ரேஷன் கடை பணியாளர் பணியிடங்களுக்கு, நேர்முக தேர்வு துவங்கி நடைபெற்று வருகிறது.
செங்கல்பட்டு மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் வாயிலாக, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில், கூட்டுறவு நிறுவனங்கள் உள்ளன.
இந்நிறுவனத்தில், ரேஷன் கடை விற்பனையாளர் 97, கட்டுனர் 87 என, மொத்தம் 184 காலியிடங்கள் உள்ளது. நேரடி நியமனம் வாயிலாக, இப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு, 8,011 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து, செங்கல்பட்டு அடுத்த வல்லம் ஊராட்சியில், தனியார் திருமண மண்டபத்தில், ரேஷன் கடை விற்பனையாளர், கட்டுனர் பணியிடங்களுக்கு, கடந்த 25ம் தேதி நேர்காணல் துவங்கி, வரும் டிசம்பர் மாதம் 6ம் தேதி வரை நடக்கிறது.
இதில், தினமும் 350 பேரிடம் நேர்காணல் நடத்தப்படுகிறது. இந்த நேர்காணலை, கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் சிவமலர், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் நந்தகுமார் ஆகியோர், நேற்று ஆய்வு செய்தனர்.