/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கைக்கு 'ரெட் அலர்ட்' பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
/
செங்கைக்கு 'ரெட் அலர்ட்' பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
செங்கைக்கு 'ரெட் அலர்ட்' பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
செங்கைக்கு 'ரெட் அலர்ட்' பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
ADDED : நவ 28, 2025 04:03 AM
செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில், இரண்டு நாட்கள் மிக கன மழை எதிர்பார்க்கப்படுவதால், மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்திற்கு, தேசிய வானிலை ஆராய்ச்சி நிறுவனம், வரும் 29 மற்றும் 30ம் தேதி ஆகிய இரு நாட்களுக்கு 'ரெட்' மற்றும் 'ஆரஞ்சு அலர்ட்' விடுத்துள்ளது. மாவட்டத்தில் மிக கனமழை மற்றும் கன மழை எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் பாலாறு, ஏரி, குளங்கள் போன்ற ஆழமான நீர்நிலைகள் உள்ள பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம்.
மேற்கண்ட நாட்களில், அத்தியாவசிய பொருட்கள் கையிருப்பில் வைத்திருக்கவும். வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இயற்கை இடர்பாடுகள் குறித்த புகார் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள, கலெக்டர் அலுவலகத்தில் அவசரகால காட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் இயங்கி வருகிறது.
புகார்களுக்கு தொலைபேசி எண்கள்: 044 - 27427412-14 மற்றும் 'வாட்ஸாப்' எண் 94442 72345 ஆகிய எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். வெள்ள அபாயம், சேதம் குறித்த புகைப்படங்களை, வாட்ஸாப் எண்ணிற்கு அனுப்பி வைக்கலாம்.

