/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குடிபோதை தகராறில் வாலிபரை அடித்து கொன்ற உறவினர் கைது
/
குடிபோதை தகராறில் வாலிபரை அடித்து கொன்ற உறவினர் கைது
குடிபோதை தகராறில் வாலிபரை அடித்து கொன்ற உறவினர் கைது
குடிபோதை தகராறில் வாலிபரை அடித்து கொன்ற உறவினர் கைது
ADDED : செப் 24, 2025 10:45 PM
திருப்போரூர்:திருப்போரூர் அருகே, மதுபோதை தகராறில் வாலிபரை அடித்துக் கொன்ற அவரது உறவினரை, போலீசார் கைது செய்தனர்.
திருப்போரூரை அடுத்த மானாமதி கிராமத்தைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், 38; இவரது பெரியப்பா மகன்கள் குப்புசாமி, 43, மோகன், 37.
நேற்று முன்தினம் மாலை 3:00 மணியளவில் மூவரும், குப்புசாமி வீட்டில் அமர்ந்து மது அருந்தினர். அப்போது, அவர்களுக்குள் போதையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில், போதையில் இருந்த குப்புசாமி, அருகே இருந்த இரும்பு கம்பியை எடுத்து, கோபாலகிருஷ்ணனின் தலை மற்றும் முகத்தில் தாக்கியுள்ளார்.
இதில் பல், தாடை உடைந்து பலத்த காயம் ஏற்பட்டு, கோபாலகிருஷ்ணன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
அங்கிருந்தோர் அவரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சுயநினைவின்றி சிகிச்சையில் இருந்த கோபாலகிருஷ்ணன், சிகிச்சை பலனின்றி நேற்று காலை 10:30 மணியளவில் உயிரிழந்தார்.
இதையடுத்து, திருப்போரூர் போலீசார் வழக்கு பதிந்து, மானாமதி கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமியை கைது செய்து விசாரிக்கின்றனர்.